வியாழன், 5 மே, 2011

கோவை காருண்யா பல்கலை.யில் பி.கின். 4 ஆண்டு படிப்பு அறிமுகம்


http://www.karunya.edu/images/logo_01.gif





கோவை:

              நாட்டிலேயே முதன்முறையாக, கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் பி.கின். என்ற னித உடல் இயங்குவியல் புதிய பட்டப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

            இந்தப் பட்டப் படிப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கனடாவில் உள்ள ரெஜினா பல்கலைக்கழக அதிகாரிகளும், காருண்யா பல்கலைக்கழக துணைவேந்தரும் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டனர். 

இதுதொடர்பாக, காருண்யா பல்கலைக்கழக துணைவேந்தர் பால் அப்பாசாமி கூறியது:  

              இந்தியாவிலேயே முதன்முறையாக பி.கின்- மனித உடல் இயங்குவியல் என்ற பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நான்கு ஆண்டு பட்டப் படிப்பை, கனடா பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்தை முதல் இரண்டு ஆண்டுகள், காருண்யா பல்கலைக்கழகம் பயிற்றுவிக்கும். மாணவர்கள் தங்களது கடைசி இரண்டு ஆண்டுகளை கனடாவில் உள்ள ரெஜினா பல்கலைக்கழகத்தில் படிப்பார்கள். 

 பி.கின். வயோதிகம், மனித இயக்கவியல் படிப்புகள்: 

              பி.கின். வயோதிகம் மற்றும் பி.கின். மனித இயக்கவியல் ஆகிய இரு படிப்புகள் வழங்கப்படும். இதில் பி.கின். வயோதிகப் பாடப் பிரிவு முடிப்போருக்கு நிர்வாக அதிகாரி (மருத்துவமனை, முதியோர் இல்லங்கள்), சமூகக் கூடங்கள், அரசு துறைகள், மறுவாழ்வுத் துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.  

               பி.கின். மனித இயக்கவியல் பாடத்தில் படிப்போருக்கு உடற்பயிற்சி இயக்குநர், அலுவலர்களின் ஆரோக்கிய அதிகாரி, விளையாட்டு மருத்துவ சேவைகள், சமூக மன்றங்கள், கல்வி நிலையங்கள், அரசு துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.  கனடா பல்கலைக்கழகத்திற்குச் சென்று 2 ஆண்டுகள் படிக்க வேண்டியிருப்பதால், இதற்கான கல்வி கட்டணம் ரூ. 3 லட்சம் வரை இருக்கும்.  கனடாவில் சென்று படிக்கும்போது இன்னும் கூடுதலாக செலவாகும் என்றார்.  

             பல்கலைக்கழக பதிவாளர் ஆனி மேரி பெர்னாண்டஸ், ஜெனட் வெண்ணிலா, பயோடெக்னலாஜி இயக்குநர் பேட்ரிக் கோமஸ் மற்றும் கனடா பல்கலைக்கழக டீன் கிரேக் சாம்பர்லின், பல்கலைக்கழக ஆலோசகர் ஜெனிபர் லவ்கிரீன், பல்கலைக்கழக பேராசியர் சாந்தி ஜான்சன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

More Details 

Karunya University,
Karunya Nagar,
Coimbatore-641 114,
Tamil Nadu..
Phone : 0422 - 2614300
Fax    : 91 422 2615615

மாணவர் சேர்க்கை 
The Admission Officer,
 Karunya University,
Karunya Nagar,
Coimbatore - 641 114
Phone : 0422-2614440
            0422-2614441
email   : admissions@karunya.edu
 


Web :
http://www.karunya.edu/


0 கருத்துகள்:

Google Indic Transliterate

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP