சனி, 7 மே, 2011

இந்திராகாந்தி விமான பயிற்சி நிறுவனத்தில் பைலட் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை


 http://www.igrua.gov.in/images/iSO%20Logo.gif






            மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திராகாந்தி    விமான    பயிற்சி    நிறுவனத்தில் பைலட் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. 
 
           மொத்தம் 125 காலியிடங்கள் (UR63, SC19, OBC34) உள்ளன. 17 வயது பூர்த்தியடைந்தவர்கள்  விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்காலம் 15 மாதங்கள். 
 
            பிளஸ் 2 தேர்வில் கணக்கு, இயற்பியல் பாடங்களில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் 50 சதவீத மதிப்பெண் பெற்றால் போதுமானது. பயிற்சி கட்டணம் ரூ.24 லட்சத்து 60 ஆயிரத்தை நான்கு தவணைகளில் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை, பைலட் ஆப்டிடியூட் டெஸ்ட் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
 
இதற்கான விண்ணப்பக்கட்டணமாக ரூ.5 ஆயிரத்தை 'Indira Gandhi Rashtriya Uran Akademi' 
 
            என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடியாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்ப மாதிரி, இணைக்க வேண்டிய சான்றுகள் உள்ளிட்ட விவரங்களை http://www.igrua.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அட்மிட் கார்டு மூலம் தேவையான விவரங்கள் தெரிவிக்கப்படும். 
 
        ஜூன்.12ம் தேதி வரை அட்மிட் கார்டு கிடைக்காதவர்கள் 0535&2441144, 2441150 ஆகிய பயிற்சி நிறுவன தொலை பேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம்.

Read more...

வேலூர் விஐடி பி.டெக். நுழைவுத் தேர்வு: ஆந்திர மாணவர் முதல் இடம்




வேலூர்:

             விஐடி பி.டெக். நுழைவுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. இதில் முதல் 3 இடங்களை ஆந்திர மாநில மாணவர்கள் பிடித்தனர்.  நுழைவுத் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக வேந்தர் ஜி. விஸ்வநாதன் வெளியிட்டார்.

 அதைத் தொடர்ந்து பல்கலைக்கழக வேந்தர் ஜி. விஸ்வநாதன் கூறியது:  

              நுழைவுத் தேர்வு எழுத ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 493 மாணவ, மாணவியர் விண்ணப்பம் அளித்திருந்தனர். இவர்களில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 668 மாணவர்கள், 31 ஆயிரத்து 656 மாணவியர் தேர்வு எழுதினர்.  முதல் 3 இடங்களை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் முறையே கே.ஹர்ஷவர்த்தன் (விஜயவாடா), பி.சாய்கிரண் (ஹைதராபாத்), எம். அசோக் வரதன் (குண்டூர்) கைப்பற்றியுள்ளனர்.  முதல் 10 இடங்களில் 6 ஆந்திர மாணவர்களும், புதுதில்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், மத்திய பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒரு மாணவரும் இடம்பெற்றுள்ளனர்.  தரவரிசையில் முதல் 300 இடங்களுக்குள் தமிழகத்தைச் சேர்ந்த 10 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். 

              இவர்களில் ரோஷன் ஜெய்சங்கர், எஸ். அரவிந்த், ரஞ்சனி சீனிவாசன், வி. ஹரிகிருஷ்ணா, எச். சூரஜ்குமார், எம். கார்த்திக், ஆர். ஆதித்யா, ஏ. மீனாட்சி ஆகிய 7 மாணவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.  தரவரிசையில் 15 ஆயிரம் இடங்களுக்குள் வேலூரை சேர்ந்த 12 மாணவ, மாணவியர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 6 மாணவ, மாணவியர் ஐடாஸ்கடர் பள்ளியையும், 5 பேர் சிருஷ்டி மெட்ரிகுலேஷன் பள்ளியையும், ஒரு மாணவர் சன்பீம் பள்ளியையும் சேர்ந்தவர்கள்.  ரியாத், சிங்கப்பூர், துபாய் ஆகிய இடங்களில் நடைபெற்ற நுழைவுத் தேர்வுகளில் 200 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 26 பேர் நுழைவுத் தேர்வில் தரவரிசையில் முன்னிலை பெற்றுள்ளனர். 

 நுழைவுத் தேர்வு முடிவுகள்










        ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. 

 ஜூன் 1-ல் கவுன்சலிங் தொடக்கம்  

               1 முதல் 4 ஆயிரம் வரையிலான தரவரிசையில் இடம்பெற்ற மாணவ, மாணவியருக்கு ஜூன் 1-ம் தேதி கவுன்சலிங் நடைபெறுகிறது. 4001 முதல் 7 ஆயிரம் வரையிலான தரவரிசை மாணவர்களுக்கு 2-ம் தேதியும், 7001 முதல் 10 ஆயிரம் வரையிலான தரவரிசை மாணவர்களுக்கு 3-ம் தேதியும், 10001 முதல் 13 ஆயிரம் வரையிலான தரவரிசை மாணவர்களுக்கு 4-ம் தேதியும், 13001 முதல் 16 ஆயிரம் வரையிலான தரவரிசை மாணவர்களுக்கு 6-ம் தேதியும் கவுன்சலிங் நடைபெறும். கவுன்சலிங் வேலூர் மற்றும் சென்னை வளாகங்களில் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன. மாணவர்கள் இந்த இரு இடங்களில் ஏதேனும் ஒன்றில் பங்கேற்கலாம் என்றார் வேந்தர் விஸ்வநாதன்.  விஐடி துணைத் தலைவர்கள் ஜி.வி. சம்பத், சேகர் விஸ்வநாதன், துணை வேந்தர் ராஜு ஆகியோர் உடனிருந்தனர்.

Read more...

காரைக்குடி தமிழ்நாடு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காரைக்குடி:

             காரைக்குடி அருகே நயினார்புரம் தமிழ்நாடு கல்வியியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. 

 விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சேது.சுடலைமுத்து 78 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசியது: 


             பட்டம்பெறும் ஒவ்வொருவரும் சிறந்த ஆசிரியர்களாகத் திகழவேண்டும். ஆசிரியர் பாடம் நடத்த வகுப்புக்குச் செல்லும் முன் அன்று கற்பிக்க வேண்டிய பாடத்தை நன்கு படித்திருக்கவேண்டும்.  கற்பிப்பதை ஆழமாகச் சொல்ல வேண்டும், கற்றலில் மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும், கல்வியில் தொழில்நுட்பங்கள் பற்றியும் அறிந்திருத்தல் வேண்டும்.  மாணவர்கள் மத்தியில் தாம் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்து அவர்களிடையே ஒழுக்கத்தையும் உருவாக்குவதன் மூலம் சிறந்த ஆசிரியர்களாக முடியும் என்றார்.  கல்லூரித் தலைவர் எல்.பெரியதம்பி தலைமை வகித்துப் பேசினார். 

              குன்றக்குடி அடிகளார் மகளிர் கல்வியியல் கல்லூரி ஆராய்ச்சித் துறை இயக்குநர் எஸ். மோகன் சிறப்புரையாற்றினார்.  வி.சேலஞ்சர்ஸ் பள்ளியின் தாளாளர் வைரவசுந்தரி, அழகப்பா பல்கலை. இணை இயக்குநர் ராஜ்குமார், தொடர்பு அலுவலர் சேகரன், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  முன்னதாக கல்லூரிச்செயலர் ஆர்.தண்டபாணி வரவேற்றார். கல்லூரி முதல்வர் கே.குணசேகரன் நன்றி கூறினார்

Read more...

வேளாண் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் துவக்கம்

கோவை:

              வேளாண் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் துவங்கிய முதல் நாளான வெள்ளிக்கிழமை 992 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றனர்.

               மிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் பிஎஸ்ஸி-யில் வேளாண்மை, தோட்டக்கலை, மனையியல், வனவியல், பட்டு வளர்ப்பு, வேளாண் தொழில் மேலாண்மை, பிடெக்-ல் வேளாண் பொறியியல், உணவு பதன்செய் பொறியியல், உயிரித் தொழில்நுட்பவியல், தோட்டக்கலை, ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், உயிரித் தகவலியல், வேளாண் தகவல் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. 

               இப்படிப்புகளில் மொத்தம் 1,365 இடங்கள் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் கவுன்சலிங் மூலம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.பிஎஸ்ஸி படிப்புகளுக்கு பிளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப் பிரிவினர்; இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிர் வேதியியல் அல்லது உயிரித் தொழில்நுட்பம் அல்லது நுண்ணுயிரியல் அல்லது மனையியல் அல்லது கணினி அறிவியல் பாடப் பிரிவினர்; இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

              பி.டெக் படிப்புகளுக்கு பிளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப் பிரிவினர், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் பாடப் பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.வேளாண் பல்கலைக்கழகத்திலும், மேட்டுப்பாளையம், மதுரை, திருச்சி, பெரியகுளம், தேனி, கிள்ளிகுளம் ஆகிய இடங்களில் உள்ள இணைப்புக் கல்லூரிகள், சென்னையில் உள்ள நகர்ப்புற தோட்டக்கலை வளர்ச்சி மையம் ஆகிய இடங்களிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்புவோர் 

முதன்மையர் (வேளாண்மை), 
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 
வேளாண் பல்கலைக்கழகம், 
கோவை -641003

          ன்ற முகவரிக்கு வேண்டுதல் கடிதம், விண்ணப்பக் கடிதம் ரூ.670-க்கான வரைவோலை ஆகியவற்றுடன் அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம். பல்கலை.யின் இணையதளத்தில்  இருந்தும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். பல்கலைக்கழக வளாகத்தில் விண்ணப்பங்கள் விநியோகத்தை, துணைவேந்தர் பி.முருகேசபூபதி வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார். வேளாண் கல்லூரி முதல்வர் ஏ.ராஜராஜன், ஆராய்ச்சி இயக்குநர் மு.பரமாத்மா ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் நாளில் அனைத்து மையங்களிலும் சேர்த்து மொத்தம் 992 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றனர். மே 31-ம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.




Read more...

மாவட்ட மைய நூலகங்களில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

          மாவட்ட மைய நூலகங்களில் பெயர் பதிவு செய்தால் போதும், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண்ணுடன் எஸ்.எம்.எஸ்., ல் அனுப்பி வைக்கப்படும். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ல் வெளியிடப்படவுள்ளது. இதை நூலகம் மூலம் எஸ்.எம்.எஸ்.,ல் அனுப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. பாட வாரியாகவும் மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்படும். இதற்காக மாணவர்கள் மாவட்ட மைய நூலகத்தில் மொபைல் எண், பெயர், தேர்வு எண்ணையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன்படி மாணவர்கள் நூலகங்களுக்கு வந்து செல்லும் வாய்ப்பை ஏற்படுத்த, இது போன்ற புதிய நடைமுறையை ஏற்படுத்தி உள்ளனர்.

Read more...

அரசு பாலிடெக்னிக்களில் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்குநாளை மறுநாள் முதல் விண்ணப்பம்

             அரசு பாலிடெக்னிக்களில், வரும் 2011-12ம் கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு, நாளை மறுநாள் முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2 மற்றும் ஐ.டி.ஐ., முடித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அனைத்து அரசு பாலிடெக்னிக்களிலும் விண்ணப்பங்களை பெறலாம். விண்ணப்பத்தை அனுப்ப, வரும் 25ம் தேதி கடைசி நாள்.
 
            எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படும். மற்ற பிரிவினர், விண்ணப்ப கட்டணமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும். சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக்கில், செயற்கை உறுப்புகள் மற்றும் முடநீக்கியல் பட்டயப் படிப்பிற்கும், டாக்டர் தர்மாம்பாள் அரசு பாலிடெக்னிக்கில், ஒப்பனை கலை பட்டயப் படிப்புக்கும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்ப கல்வி கமிஷனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

Google Indic Transliterate

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP