செவ்வாய், 28 ஜூன், 2011

அழகப்பா பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

         அழகப்பா பல்கலைக்கு உட்பட்டு சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கும் இணைப்பு கல்லூரிகளில் பட்டப்படிப்பிற்கான பருவ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

          இம்முடிவுகளை மாணவர்கள் www.alagappauniversity.ac.in வெப்சைட்டில் தெரிந்து கொள்ளலாம். முடிவு வெளியான 10 நாட்களுக்குள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பல்கலை இணையதளம் மற்றும் கல்லூரிகளில் பெறலாம். 

               விண்ணப்பத்துடன் ரூ. 225க்கு டி.டி., எடுத்து பல்கலை., தேர்வு பிரிவிற்கு அனுப்புமாறு, தேர்வாணையர் மாணிக்கவாசகம் தெரிவித்தார்.

Read more...

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரிகளில் 2 லட்சம் மாணவர்கள்

          இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ) நாடு முழுவதும் தொடங்கிய சமுதாயக் கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் இரண்டு லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.  இத்தகவலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.என். ராஜசேகரன் பிள்ளை தெரிவித்தார். 

               இக்னோவுடன் இணைந்து 600 சமுதாயக் கல்லூரிகள் இயங்குகின்றன. இக்கல்லூரிகளில் தொழிற்கல்வி, செயல்முறைப் படிப்பு ஆகியவை நடத்தப்படுகின்றன.  பள்ளிப் படிப்பை அடுத்து, இத்தகைய தொழிற்படிப்புகளில் சேர்ந்து படித்தால், வாழ்க்கைக்கு அது பெரிதும் உதவும். இத்தகைய கல்விமுறை உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றார் ராஜசேகரன் பிள்ளை. திறந்தநிலைக் கல்வி, வசதியான கால அளவுத் திட்டம், தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கற்பித்தல் முறை, தொலைநிலைக் கல்வி முறை ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும். இக்கல்லூரிகள் உயர்நிலைக் கல்விக்குச் சரியான மாற்று ஏற்பாடாகவே அமைந்துள்ளன என்றார் துணைவேந்தர். 

             நாட்டிலேயே முதல் முதலாக இக்னோ சார்பில் புதுவைப் பல்கலைக்கழகத்தில்தான் சமுதாயக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் அரசு தொடங்கிய எல்லா பல்கலைக்கழகங்களும் தலா 10 சமுதாயக் கல்லூரிகளைத் தொடங்குவது என முடிவு செய்துள்ளன என்றும் ராஜசேகரன் பிள்ளை கூறினார். சமுதாயக் கல்லூரிகளில் இரண்டாண்டுக்கு மேல் படிப்பைத் தொடர இயலாவிட்டால், இரண்டாம் ஆண்டுத் தேர்வுகளைப் பூர்த்தி செய்பவர்களுக்கு இணைப் பட்டப்படிப்பு (அசோசியேட் டிகிரி) வழங்கப்படுகிறது.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

சனி, 4 ஜூன், 2011

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நெட், செட் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி

           கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதவியின் கீழ், நெட்  மற்றும் செட் தகுதித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட உள்ளது. 

            பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் நடத்தப்படும் நெட் மற்றும் செட் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, முதல் தாளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் 10 மாதிரித் தேர்வுகளுடன் நடைபெற உள்ளன. 

           இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள நெட் தேர்வுக்கும், ஆகஸ்டு 14-ம் தேதி நடைபெற உள்ள செட் தகுதித் தேர்வுக்கும் விண்ணப்பம் அனுப்பலாம். 

 மேலும் விவரங்களுக்கு 
 
          0452-2456100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.  இத்தகவலை, மதுரை காமராசர் பல்கலைக்கழக மானியக்குழு நெட், செட் பயிற்சித் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் வெ. சின்னையா தெரிவித்துள்ளார்.

Read more...

Google Indic Transliterate

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP