செவ்வாய், 24 மே, 2011

பாரத் பல்கலைக்கழக பி.இ. பாடத் திட்டத்தில் வாழ்க்கைத் தொழில் கல்விப் பாடம்

               மாறி வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் பொறியியல் படிப்புகளுக்கான பாடத் திட்டத்தில், வாழ்க்கைத் தொழில் கல்விப் பாடம் என்ற புதிய பகுதியை பாரத் பல்கலைக்கழகம் இணைக்க உள்ளது.  பொறியியல் படிப்பின் இரண்டாம் ஆண்டு பாடத் திட்டத்தில், இந்த புதிய பாடம் வழங்கப்பட உள்ளது.  

இதுகுறித்து பாரத் அறிவியல் தொழில்நுட்ப மைய முதல்வர் ஆர். காரி தங்கரத்தினம் திங்கள்கிழமை கூறியது:  

              வாழ்க்கைத் தொழில் கல்விப் பாடம் ஐபிஎம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இதை மாணவர்களுக்கு கற்பிக்கவும், பயிற்சி அளிப்பதற்காகவும், ஐபிஎம் நிறுவனத்துடன் பாரத் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  போட்டிகள் நிறைந்த இந்த சூழலில், இதுபோன்ற பாடத் திட்டங்கள் மிகவும் அவசியம். குறிப்பாக -டெஸ்ட்டிங் சாஃப்ட்வேர்- துறையில் மாணவர்களுக்கு, ஐபிஎம் நிறுவனம் பயிற்சி அளிக்க உள்ளது என்றார்.

Read more...

தமிழகத்தில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ வகுப்பில் சேர 28ல் நுழைவுத்தேர்வு துவக்கம்

                  தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்சிஏ, எம்பிஏ படிப்பில் சேர வரும் 28ம் தேதி முதல் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை 99 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

      தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வின் (டான்செட்) கீழ் கவுன்சலிங் மூலம் அண்ணா பல்கலைக்கழகம், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் எம்சிஏ., எம்பிஏ., எம்.இ., மற்றும் எம்.டெக்., சேர்க்கை நடைபெறுகிறது. இதன் கீழ் சுமார் 200 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வருகின்றன. டான்செட் மூலம் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும் நிரப்பப்படுகின்றன.

                 இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் இறுதிவரை மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டது. தமிழகம் முழுவதும் 99 ஆயிரம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வில் கணிதம், ரீசனிங், ஆங்கிலம், டேட்டா இன்டர்ப்ரேட்டசன் போன்ற பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு மதிப்பெண். தவறான பதிலுக்கு 0.25 மதிப்பெண் கழிக்கப்படும். இதில் 40 மதிப்பெண்கள் எடுத்தாலே சிறந்த கல்லூரிகளில் சேரலாம்.

             இந்தாண்டு எம்பிஏ., க்கான நுழைவுத் தேர்வு வரும் 28 காலை 10 மணிக்கும் எம்சிஏ.,விற்கு மதியம் 2.30 மணிக்கும் நடைபெறுகிறது. மே 29ல் எம்.இ., மற்றும் எம்.டெக்., தேர்வுகள் காலையில் நடைபெறும். ஜூன் 3ம் வாரத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறுகையில் 


           ‘இந்தாண்டு அதிகளவிலான மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் மேற்படிப்பிற்கான டான்செட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இன்ஜினியரிங் கவுன்சலிங்கை போல் டான்செட்டிலும் காலியிடங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இளங்கலை படிக்கும் போதே நன்றாக படித்தால் டான்செட்டில் அதிக மதிப்பெண் பெறமுடியும்’ என்றார்.

Read more...

Google Indic Transliterate

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP