வெள்ளி, 20 மே, 2011

வேல் டெக் தொழில்நுட்ப கல்லூரி பட்டமளிப்பு விழா

         வேல் டெக் டாக்டர் ஆர்.ஆர் மற்றும் டாக்டர் எஸ்.ஆர். தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா சென்னை ஆவடியில் அண்மையில் நடைபெற்றது.  

          பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் எஸ்.சுந்தரேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் 789 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 10 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு வேல் டெக் மகாத்மா காந்தி கல்வி உதவித்தொகையாக மொத்தம் ரூ.7 கோடி வழங்கப்பட்டது. பல்கலைக்கழக நிறுவனர் தலைவர் டாக்டர் வேல் ஆர்.ரங்கராஜன், நிறுவனர்-துணைத் தலைவர் டாக்டர் சகுந்தலா ரங்கராஜன், துணை வேந்தர் டாக்டர் எம்.கோடீஸ்வரன், பதிவாளர் டாக்டர் இ.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more...

அண்ணா பல்கலை.: 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

          சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி. படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.  

            சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.எஸ்சி. எலெக்ட்ரானிக் மீடியா ஆகிய ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்புகள் வழங்கப்படுகின்றன.  எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர, பிளஸ்-2-வில் கணிதம், இயற்பியல், வேதியல் பாடங்களுடன் முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.எஸ்சி. எலெக்ட்ரானிக் மீடியா படிப்பில் சேர பிளஸ்-2-வில் ஏதாவது ஒரு பிரிவின் கீழ் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. 

    இதற்கான விண்ணப்பங்களையும், விவரங்களையும் www.annauniv.edu இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, 

இயக்குநர் (மாணவர் சேர்க்கை), 
மாணவர் சேர்க்கைக்கான மையம், 
அண்ணா பல்கலைக்கழகம், 
சென்னை - 600 025 

என்ற முகவரிக்கு ஜூன் 6-ம் தேதி மாலை 5.30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Read more...

Google Indic Transliterate

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP