வியாழன், 5 மே, 2011

கோவை காருண்யா பல்கலை.யில் பி.கின். 4 ஆண்டு படிப்பு அறிமுகம்


http://www.karunya.edu/images/logo_01.gif





கோவை:

              நாட்டிலேயே முதன்முறையாக, கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் பி.கின். என்ற னித உடல் இயங்குவியல் புதிய பட்டப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

            இந்தப் பட்டப் படிப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கனடாவில் உள்ள ரெஜினா பல்கலைக்கழக அதிகாரிகளும், காருண்யா பல்கலைக்கழக துணைவேந்தரும் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டனர். 

இதுதொடர்பாக, காருண்யா பல்கலைக்கழக துணைவேந்தர் பால் அப்பாசாமி கூறியது:  

              இந்தியாவிலேயே முதன்முறையாக பி.கின்- மனித உடல் இயங்குவியல் என்ற பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நான்கு ஆண்டு பட்டப் படிப்பை, கனடா பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்தை முதல் இரண்டு ஆண்டுகள், காருண்யா பல்கலைக்கழகம் பயிற்றுவிக்கும். மாணவர்கள் தங்களது கடைசி இரண்டு ஆண்டுகளை கனடாவில் உள்ள ரெஜினா பல்கலைக்கழகத்தில் படிப்பார்கள். 

 பி.கின். வயோதிகம், மனித இயக்கவியல் படிப்புகள்: 

              பி.கின். வயோதிகம் மற்றும் பி.கின். மனித இயக்கவியல் ஆகிய இரு படிப்புகள் வழங்கப்படும். இதில் பி.கின். வயோதிகப் பாடப் பிரிவு முடிப்போருக்கு நிர்வாக அதிகாரி (மருத்துவமனை, முதியோர் இல்லங்கள்), சமூகக் கூடங்கள், அரசு துறைகள், மறுவாழ்வுத் துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.  

               பி.கின். மனித இயக்கவியல் பாடத்தில் படிப்போருக்கு உடற்பயிற்சி இயக்குநர், அலுவலர்களின் ஆரோக்கிய அதிகாரி, விளையாட்டு மருத்துவ சேவைகள், சமூக மன்றங்கள், கல்வி நிலையங்கள், அரசு துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.  கனடா பல்கலைக்கழகத்திற்குச் சென்று 2 ஆண்டுகள் படிக்க வேண்டியிருப்பதால், இதற்கான கல்வி கட்டணம் ரூ. 3 லட்சம் வரை இருக்கும்.  கனடாவில் சென்று படிக்கும்போது இன்னும் கூடுதலாக செலவாகும் என்றார்.  

             பல்கலைக்கழக பதிவாளர் ஆனி மேரி பெர்னாண்டஸ், ஜெனட் வெண்ணிலா, பயோடெக்னலாஜி இயக்குநர் பேட்ரிக் கோமஸ் மற்றும் கனடா பல்கலைக்கழக டீன் கிரேக் சாம்பர்லின், பல்கலைக்கழக ஆலோசகர் ஜெனிபர் லவ்கிரீன், பல்கலைக்கழக பேராசியர் சாந்தி ஜான்சன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

More Details 

Karunya University,
Karunya Nagar,
Coimbatore-641 114,
Tamil Nadu..
Phone : 0422 - 2614300
Fax    : 91 422 2615615

மாணவர் சேர்க்கை 
The Admission Officer,
 Karunya University,
Karunya Nagar,
Coimbatore - 641 114
Phone : 0422-2614440
            0422-2614441
email   : admissions@karunya.edu
 


Web :
http://www.karunya.edu/


Read more...

திருச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா குடிலில் இலவசக் கல்வி: ஆதரவற்ற குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு:

                இலவசக் கல்வியைப் பெற ஆதரவற்றக் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக   திருச்சி மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  

               திருச்சி மாவட்டம், திருப்பராய்துறையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா குடிலில், தாய், தந்தை இருவருமே இல்லாத, ஆதரவற்ற ஏழை சிறுவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.  இங்கு, 1 முதல் 8-ம் வகுப்பு வரை இங்கு பயிலலாம். 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு குடில் நிர்வாகத்தில் ஓராண்டு பயிற்சி அளித்த பின், திருச்சியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்த்து விடப்படுவர். 

               தொழிற்பயிற்சி முடித்த மாணவர்கள் வேலைவாய்ப்புக்குரிய தகுதிகளுடன் வெளியில் அனுப்பி வைக்கப்படுவார்கள். பள்ளியில் படிக்கும்போது மாணவர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி கற்றுத் தரப்படுகிறது.  

தாய், தந்தை இருவரும் இல்லாத குழந்தைகளை குடிலில் சேர்க்க விரும்புவோர், 

தலைவர், 
ஸ்ரீ ராமகிருஷ்ண குடில், 
திருப்பராய்த்துறை, 
திருச்சி - ௬௩௯௧௧௫

  மற்றும் 

சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, 
சென்னை - 9 

ன்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

Read more...

தஞ்சை மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் 2,278

தஞ்சாவூர்:

      தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 2,278 குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர் என்றார் அனைவருக்கும் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலர் வி. கோபாலகிருஷ்ணன்.

 இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலர் வி. கோபாலகிருஷ்ணன் மேலும் கூறியது:  

               அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை கண்டறிவதற்காக ஆசிரியர் பயிற்றுநர்கள் ஒவ்வொரு குடியிருப்புப் பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.  இந்த ஆய்வில் பள்ளியில் சேராத குழந்தைகள், பள்ளிக்குச் சென்று இடையில் நின்ற குழந்தைகள், பள்ளிக்கு போகாத குழந்தைகள் என மூன்று வகையில் கணக்கெடுக்கப்படுகிறது. 

                 மாவட்டத்தில் 16 சிறப்புப் பயிற்சி மையங்களில் 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் 342 பேரும், 135 இணைப்பு மையங்களில் 2,178 மாணவர்கள் 1 முதல் 8 வகுப்பு வரை படித்து வருகின்றனர். மேலஉளூர், பூதலூர், கீழத் திருவிழாப்பட்டியில் நரிக்குற குழந்தைகள் படிக்க பிரத்யேகமாக உண்டு உறைவிட மையம் அமைக்கப்பட்டுள்ளது. தவிர இதே போல் 5 உண்டு உறைவிட மையங்களில் 345 குழந்தைகள் படிக்கின்றனர்.  இத் திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு பாடப்புத்தகம், பை, காலணி, எழுது பொருள்கள் மற்றும் சீருடை வழங்கப்படுகிறது. உண்டு உறைவிட மையங்களில் 3 வேளைக்கு உணவும், பிற மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படுகிறது. 

               கடந்த ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் மார்ச் மாதத்துடன் படிப்பை முடித்துள்ளனர். அவர்கள் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்படுவர்.  நிகழாண்டு இத் திட்டத்தில் 2,345 மாணவர்கள் கண்டறிந்து சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 394 குடியிருப்புகளில் ஆய்வு நடத்தப்பட்டு பள்ளிச் செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டன. வெளிமாநிலம் அல்லது மாவட்டத்தைச் சேர்ந்தவர்களில் பள்ளிச் செல்லா குழந்தைகள் இருந்தாலும் அவர்களும் கண்டறிந்து படிக்க அனுப்பி வருகிறோம். மாற்று மொழி பேசுபவராக இருந்தால் அந்த மொழி தெரிந்தவர்களை கொண்டு பாடம் கற்பிக்கப்படுகிறது. 

              மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை 1,412 ஆண்கள், 866 பெண்கள் என மொத்தம் 2,278 மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். நிகழாண்டில் கூடுதலாக உண்டு உறைவிடப்பள்ளி, சிறப்பு முகாம்கள், இணைப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.  தொண்டு நிறுவனங்கள், கிராமங்களிலுள்ள இளைஞர் அமைப்பு களின் உதவியோடு பள்ளிச்செல்லா குழந்தைகள் கண்டறியப்படுகின்றன. இக் கணக்கெடுப்பின் போது மாற்றுத் திறனாளிகளின் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் ஒன்றியத்திலுள்ள வட்டார வளர்ச்சி மையங்களில் பகல் நேர பாதுகாப்பு மையம் இயங்குகிறது. 

              இங்குள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு மற்றும் உடல் நலம் பேணுவதற்கான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அவர்களை அழைத்து வரும் பெற்றோருக்கு போக்குவரத்துச் செலவுத் தொகை வழங்கப்படுகிறது. 6 முதல் 14 வரையுள்ளவர்களுக்கு கல்வி அளிப்பது சமுதாயம் மற்றும் ஆசிரியரின் கடமை என்று கல்வி அறிவுச் சட்டம் கூறுகிறது.  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக ஆனந்தடேவிட், அசோக் ஆகியோர் செயல்படுகின்றனர் என்றார் கோபால கிருஷ்ணன்.

Read more...

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவச முதுநிலை பட்டயப் படிப்பு

 http://www.unom.ac.in/images/logo.jpg


CHENNAI: 

         In an attempt to innovate, the University of Madras has decided to offer a post-graduate diploma programme free of charge along with the post graduate degree offered in its departments from the coming academic year.

        Talking to reporters on Wednesday, Vice-Chancellor G. Thiruvasagam said PG students would have to compulsorily clear 12 credits, as part of the core credits for the degree, to obtain the PG diploma that would enhance their employability. As most of the students at the university were first generation graduates, the syndicate had decided to offer additional skills through industries to add value to the PG degree. For instance, students of M.A. Tamil would obtain a diploma certificate in journalism. Similarly, each department has come up with job-oriented, subject-relevant programmes to complement their study. The programmes would find mention in the prospectus.

           The university has decided to reintroduce the four-year B.Com (Honours) degree. The programme would blend theoretical knowledge with practical orientation. Colleges with ‘A' accreditation from NAAC could apply till May 31 for starting the course. Only ten colleges would be allowed in the first year and each batch would have only 30 students. The university has identified companies in sectors such as banking, insurance, chartered accountancy, consulting, retail, IT and so on. The colleges would have to enter into an agreement with the companies to offer industrial training to the students enrolled for the course, he said.

          To end the impasse in appointing qualified faculty in about 190 affiliated institutions, including arts and science colleges, stand-alone colleges offering MBA, MCA and research institutions, Mr. Thiruvasagam said the syndicate has decided to regularise the services of existing faculty as per the UGC qualification norms of 2003, 2006 and 2009. Colleges would be asked to submit details of staff with the regularisation committee to be set up to grant approvals for qualified staff. New appointments should necessarily have a NET / SLET or Ph.D as per the latest UGC norms, he said. For courses like, computer science, mass media, journalism, management, electronic science, hotel and catering management, interior design, bio-technology, bio-informatics, physical education, library science and English, the faculty would have to obtain necessary qualifications within one year, he emphasised.

           All arts and science colleges should appoint principals and standalone institutions should have directors by the end of June as per the norms, without which affiliation would not be granted hereafter, Mr. Thiruvasagam cautioned. The university would start 10 new PG programmes, including M.Tech. Geo Informatics, M.A in International Relations, South Asian Studies and M.Sc in Toxicology and Yoga. M.Phil programmes would be offered in International Relations and Political Science.




More details




Read more...

Google Indic Transliterate

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP