செவ்வாய், 17 மே, 2011

குரூப்-1 இலவச மாதிரித் தேர்வு

         குரூப்-1 தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு ஃபோகஸ் அகாதெமியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை (மே 22) நடைபெறவுள்ளது.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் கூட்டுறவு துணைப் பதிவாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, ஃபோகஸ் அகாதெமி 200 வினாக்கள் கொண்ட மாதிரித் தேர்வினை நடத்துகிறது. நடப்பு நிகழ்வுகள், பொது அறிவுப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 

கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.  

மேலும் விவரங்களுக்கு: 

044-3200 0809, 98436 65705.

Read more...

பொறியியல் மாணவர் சேர்க்கை: 30 ஆயிரம் இடங்கள் அதிகரிப்பு

         2011 12ம் ஆண்டுக்கான என்ஜினீயரிங் சேர்க்கை விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்ப வினியோகத்தை துணை வேந்தர் மன்னர் ஜவகர் தொடங்கி வைத்தார்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியது:
 

           வருகிற கல்வியாண்டிற்கு பி.இ. மற்றும் பி.டெக் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் 62 மையங்களில் வினியோகிக்கப்படுகிறது. சென்னையில் 5 இடங்களில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 488 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் 460 சுய நிதி பொறியியல் கல்லூரிகள் அடங்கும். இதன் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 20 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கிடைக்கின்றன.

             கடந்த ஆண்டு கவுன்சிலிங் முடிவில் 8,172 இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு 400 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் தங்களது பாடப்பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மனு செய்துள்ளனர். இதனால் ஏற்கனவே உள்ள கல்லூரிகள் மூலம் 30 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் கூடுதலாக கிடைக்கும். இந்த ஆண்டில் புதிதாக 120 கல்லூரிகள் அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளன. இன்னும் 1 மாதத்தில் இதற்கான அனுமதி கிடைக்கும். இதன் மூலம் கூடுதல் சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் 472 கல்லூரிகள் இருந்தன.

             இந்த ஆண்டு 16 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு முதல் தலைமுறை மாணவர்கள் 78 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும். என்ஜினீயரிங் விண்ணப்பம் வினியோகம் செய்வதற்கு அண்ணா பல்கலைக்கழ கத்தில் 20 கவுண்டர்கள் திறக் கப்பட்டு உள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறினார்.

Read more...

பொறியியல் படிப்பு: அனைத்து பாடப்பிரிவிற்கும் ஒரே விண்ணப்பம்

           தமிழ்நாடு முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அண்ணாபல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சிலிங் மூலம் சேர்வதற்காக விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 62 மையங்களில் கொடுக்கப்படுகிறது.

            மாணவ மாணவிகள் இ.சி.இ., இ.இ.இ., சிவில், மெக்கானிக் உள்ளிட்ட எந்த பாடப்பிரிவை எடுக்க விரும்பினாலும் ஒரே விண்ணப்பம்தான் வாங்க வேண்டும்.

இது குறித்து அண்ணாபல்கலைக்கழக மாணவர்சேர்க்கை அதிகாரிகள் ரைமண்ட் உத்தர்ராஜ், பேராசிரியர் ராமலிங்கம், இணை பேராசிரியர் சண்முகசுந்தரம் ஆகியோர் கூறுகையில் 

           மாணவர்கள் என்ஜினீயரிங் சேர்வதற்கு ஒரு விண்ணப்பம் வாங்கினால் போதும். ஆனால் விழிப்புணர்வு இல்லாமல் ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக விண்ணப்பம் பெற வேண்டுமா என்று கேட்கிறார்கள். அது தவறு எந்த பிரிவை எடுத்தாலும் ஒரே விண்ணப்பம் போதும் என்றனர்.

துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறுகையில் 

             பழைய கல்லூரிகளில் கூடுதல் இடம் கேட்டு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலும் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன், சிவில், மெக்கானிக், கம்ப்ழூட்டர் சயின்ஸ் ஆகிய பிரிவுகளைத்தான் விரும்பி கேட்டுள்ளனர் என்றார்.

Read more...

பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது

          தமிழ்நாட்டில் உள்ள 488 அரசு மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப சென்னை அண்ணாபல்கலைக்கழகம் கவுன்சிலிங் நடத்த உள்ளது.
           இதற்கான விண்ணப்ப படிவம் பணி நேற்று தொடங்கியது. அண்ணாபல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 62 மையங்களில் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டது. சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் வாங்க மாணவர்கள் கூட்டம் அலைமோதியது.
          இதேபோல் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள 17 அரசு மருத்துவ கல்லூரிகளிலும், அரசு பல் மருத்துவ கல்லூரியிலும் திரளான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் சென்றனர்.

Read more...

Google Indic Transliterate

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP