வெள்ளி, 6 மே, 2011

பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 25-ல் மதிப்பெண் சான்றிதழ்

          பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் மே 25-ம் தேதி வழங்கப்படும் என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

             பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 (திங்கள்கிழமை) வெளியிடப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 

இந்த ஏற்பாடுகள் குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியது: 

               பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களைப் சரிபார்க்கும் பணியும், தவறுகளைத் திருத்தும் பணியும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் சனிக்கிழமை மாலை நிறைவடையும். ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தந்தப் பள்ளிகளுக்கு மதிப்பெண் பட்டியல் அனுப்பிவைக்கப்படும். மாணவர்கள் தங்களது மதிப்பெண் விவரங்களை திங்கள்கிழமை தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு, டேட்டா சென்டர்களில் மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்கும் பணி தொடங்கும். 

              இந்தப் பணி பத்து நாள்களுக்கு மேல் நடைபெறும்.ஒவ்வொரு நாளும் அச்சடிக்கப்பட்டு வரும் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வுத் துறை பணியாளர்கள் சரிபார்ப்பர். மதிப்பெண், பெயர் விவரங்கள், சான்றிதழின் உண்மைத் தன்மை ஆகியவற்றை சரிபார்த்த பிறகு அரசுத் தேர்வுகள் இயக்குநர் முத்திரை அதில் இடப்படும். மதிப்பெண் சான்றிதழ்களை முழுமையாகச் சேகரித்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஒரே நாளில் அனுப்பி வைக்கப்படும்.பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் மே 25-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மொத்தம் 7.7 லட்சம் மாணவர்கள்: 

            இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகள் மூலம் நேரடியாகவும், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தனித் தேர்வர்களாகவும் எழுதினர். தேர்வு முடிவு மே 14-ம் தேதி வெளியிடப்படலாம் என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா அறிவித்தார். ஆனால், அவரது அறிவிப்பு தன்னிச்சையானது என்று கூறிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Read more...

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு : 97.5% தேர்ச்சி

            கன்னியாகுமரி மாவட்டத்தில் 2010-2011-ம் கல்வியாண்டுக்கான பிளஸ் 1 வகுப்பு தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

             மொத்தம் 97.50 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மாவட்டத்தில் மொத்தம் 186 பள்ளிகளைச் சேர்ந்த 10,486 மாணவர்களும், 13,033 மாணவிகளுமாக மொத்தம் 23,519 பேர் இத் தேர்வை எழுதியிருந்தனர். இதில் 10,017 மாணவர்களும், 12,916 மாணவிகளுமாக மொத்தம் 22,933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்ச்சி சதவிகிதம்: 

             மாணவர்கள்- 95.50, மாணவிகள்- 99, மொத்த தேர்ச்சி சதவிகிதம்- 97.50.  

கல்வி மாவட்ட வாரியாகத் தேர்ச்சி விவரம்:  

               தக்கலை கல்வி மாவட்டத்தில் 3,548 மாணவர்களும், 4,505 மாணவிகளுமாக மொத்தம் 8,053 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 3,385 மாணவர்களும், 4,488 மாணவிகளுமாக மொத்தம் 7,873 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்ச்சி சதவிகிதம்: 

                மாணவர்கள்- 95, மாணவிகள்- 99.60, மொத்த தேர்ச்சி சதவிகிதம்- 97.70.  குழித்துறை கல்வி மாவட்டத்தில் 3,771 மாணவர்களும், 4,260 மாணவர்களுமாக மொத்தம் 8,031 பேர் தேர்வு எழுதியிருந்தனர். அவர்களில் 3,640 மாணவர்களும், 4,222 மாணவிகளுமாக மொத்தம் 7,862 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்ச்சி சதவிகிதம்: 

              மாணவர்கள்- 96.50, மாணவிகள்- 99, மொத்த தேர்ச்சி சதவிகிதம்- 97.80.  நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 3,167 மாணவர்களும், 4,268 மாணவிகளுமாக மொத்தம் 7,435 பேர் தேர்வு எழுதியிருந்தனர். அவர்களில் 2,992 மாணவர்களும், 4,206 மாணவிகளுமாக மொத்தம் 7,198 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
  
தேர்ச்சி சதவிகிதம்: 

             மாணவர்கள்- 94, மாணவிகள்- 98.50, மொத்த தேர்ச்சி சதவிகிதம்- 96.80.

Read more...

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில் தமிழ்வழி ஆயத்தப்படிப்பு அறிமுகம்

http://www.indiasummary.com/wp-content/uploads/2009/08/ignou_results.jpg
        




              இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில் (இக்னோ) பட்டப்படிப்புக்கான ஆயத்தப்படிப்பை தமிழ்வழி பயிற்று மொழியாக அனுமதித்து, ஜூலை முதல் மாணவர் சேர்க்கையை அனுமதிக்க உத்தரவிட்டுள்ளது.

              எந்த அடிப்படை கல்வித் தகுதியும் இல்லாதவர்கள், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், உயர் கல்வியில் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, சான்றிதழ் படிப்பு பெற, இக்னோ பல்கலை ஆயத்தப் படிப்பை அடிப்படை தகுதியாக நடத்தி வருகிறது. இது ஆறுமாத கால படிப்பு. இதன்பின் 3 ஆண்டு பட்டப் படிப்பை இக்னோவிலேயே தொடரலாம். அவர்கள் மேலும் 2 ஆண்டு முதுநிலை பட்டத்தையும் தொடரலாம். இதை, தொலைநிலைக் கல்வி குழுமம் (டிஸ்டன்ஸ் எஜுகேஷன் கவுன்சில்) அங்கீகரித்துள்ளது.
           பல்வேறு தரப்பினரும் பயன்பெறும் வகையில் இப்படிப்பின் தேவையை உணர்ந்து தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா மொழிகளில் வழங்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பாடநூல்களை மொழி பெயர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.மதுரை மண்டலம் இப்பணியை முடித்துவிட்டது. வரும் ஜூலை முதல் இப்படிப்பை தமிழ் வழியில் வழங்க துணைவேந்தர் ராஜசேகரன் பிள்ளை உத்தரவிட்டுள்ளார்.


MORE DETAILS
 

http://www.ignou.ac.in/

Read more...

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இலவச சிற்பக்கலை, ஓவியப் பயிற்சி

        பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கனரா வங்கி கைவினை கலைஞர் பயிற்சி மையத்தின் சார்பில், சிற்பக்கலை, ஓவியப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

           பிளஸ் 2 தேறிய, தவறிய மாணவர்களுக்கு 18 மாத கால கற்சிற்பம், மரச்சிற்பம், உலோகச் சிற்பம் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி, சீருடை, தங்குமிடம், உணவு இலவசம். மாணவிகளுக்கு ஒருமாத கால தஞ்சாவூர் ஓவியம், செயற்கை நகை தயாரிப்பு மற்றும் பர் பொம்மை தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி, மதிய உணவு இலவசம். பயிற்சிக்கான பொருட்கள் வழங்கப்படும். விரும்புபவர்கள் காரைக்குடியில் உள்ள பயிற்சி மைய மேலாண் இயக்குனர் மேகவர்ணத்தை, 94874 12948 ல் தொடர்பு கொள்ளலாம்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

Google Indic Transliterate

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP